பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி நிறுத்தப்படுகிறதா?

18 பங்குனி 2025 செவ்வாய் 09:01 | பார்வைகள் : 294
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. கடந்த ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், எட்டாவது சீசனை விஜய் சேதுபதி நடத்தினார்.
இந்த சீசன், முந்தைய சீசன்களை போல் விறுவிறுப்பாக இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. அதன் காரணமாக, நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. முத்துக்குமரன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், விஜய் டிவியில் நிகழ்ச்சி முடிந்தவுடன், கலர்ஸ் தமிழ் சேனல் அதை மறு ஒளிபரப்பு செய்து வந்தது. ஆனால், தற்போது திடீரென அந்த மறு ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மோசமான டிஆர்பி ரேட்டிங் காரணமாகவே இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.