பாடல் கம்பேஸ் கொடுக்கும் ஏஐ டெக்னாலஜி..!

18 பங்குனி 2025 செவ்வாய் 11:34 | பார்வைகள் : 220
திரைப்படங்களுக்கான பாடல்களை கம்போஸ் செய்ய, இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் மற்றும் பாடகர்கள் அவசியம் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், தற்போது இவை மூன்றுமே இல்லாமல் ஏஐ டெக்னாலஜி மூலம் பாடல்களை உருவாக்கலாம் என சென்னை ஐஐடி மாணவர்கள் ’AI ரஹ்மான்’ என்ற ஒரு செயலியை உருவாக்கியுள்ள நிலையில், அது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஐஐடி மாணவி ஒருவர் கூறியபோது, "நாங்கள் உருவாக்கியுள்ள இந்த ப்ராஜெக்டின் மூலம், ஏஐ டெக்னாலஜிகள் கட்டுரை, கதைகள் உள்ளிட்ட அனைத்தையும் எழுதி தருவது போல், ஒரு பாடலையும் கம்போஸ் செய்ய முடியுமா?" என்ற முயற்சிதான் எங்களது ப்ராஜெக்ட்.
பாடல்களை உருவாக்க, அதற்குத் தேவையான நுணுக்கங்கள், ராகங்கள் போன்றவை தெரிந்திருக்க வேண்டும். ஒரு பாடல் கேட்பதற்கு அருமையாக இருக்க வேண்டும். அதேசமயம், நாம் கேட்கும் பாணியில் அந்தப் பாடல் அமைந்திருக்க வேண்டும். இதற்காக, சில கான்செப்டுகளை பயன்படுத்தி, தேவையான இசைக்கருவிகள் மற்றும் ஜானர்களை உருவாக்கியுள்ளோம்.
மேலும், ஒரு ஜானரிலிருந்து இன்னொரு ஜானருக்கு பாடல்களை மாற்றும் வசதியையும் கண்டுபிடித்துள்ளோம். பாடல்களை பொறுத்தவரை, ஒரு ஹம்மிங் செய்தாலே, அதற்கு ஏற்றவாறு பாடல் வரிகளையும் எழுதி, ஏஐ டெக்னாலஜி தானாகவே நிரப்பிவிடும். அது மட்டும் இல்லாமல், அதுவே பாடியும் கொடுத்துவிடும். அதற்கான மாதிரி வடிவத்தையும் நாங்கள் செய்து முடித்துள்ளோம்.
இப்போது சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். விரைவில், முழுமையாக ஏஐ கம்போஸ் செய்யும் பாடல் நமக்கு கிடைக்கும். இசையமைப்பாளர்களை வைத்து பாடல்களை கம்போஸ் செய்ய முடியாதவர்களுக்கு, இது ஒரு பெரிய உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இது இன்னும் மேம்படுத்தப்பட்டால், முழு பாடல்களையும் உருவாக்கக்கூடிய நிலைமைக்கு வரலாம். அப்போது திரைப்படங்களுக்கான பாடல்களை உருவாக்க இசையமைப்பாளர்களும் பாடல் ஆசிரியர்கள் தேவையில்லாத நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம் என கருதப்படுகிறது.