அமெரிக்க-ரஷ்ய உடன்படிக்கை - உதவிகள் தொடரும் என்கிறார் மக்ரோன்!!

18 பங்குனி 2025 செவ்வாய் 20:41 | பார்வைகள் : 1886
ரஷ்ய அதிபர் புட்டினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியூடாக உரையாடி 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு அழைத்துள்ளார். ரஷ்யா அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. ரஷ்ய-யுக்ரேன் யுத்தத்தில் இது ஒரு முக்கிய திரும்புமுனையாக உள்ளது.
இந்த உடன்படிக்கையின் போது, “யுக்ரேனுக்கு மேற்கு நாடுகள் வழங்கும் ஆயுதங்கள் நிறுத்த வேண்டும்!” எனும் கோரிக்கையை ட்ரம்பிடம் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கையில், “யுக்ரேனுக்கான ஆயுத வழங்கல்கள் தொடரும். யுக்ரேன் எங்களை நம்பாலாம். அதனை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம். ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் நாங்கள் யுக்ரேனிய இராணுவத்தை ஆதரித்து வருகிறோம்!” என தெரிவித்திருந்தார்.
கிட்டத்தட்ட இதேபோன்ற கருத்தினையே ஜேர்மனியின் தலைவர் Olaf Scholz ம் தெரிவித்திருந்தார்.
ஆயுத வழங்கலை நிறுத்துவது என்பது யுக்ரேனை வலுவடையச் செய்கிறது என செலன்ஸ்கி குற்றம்சாட்டியிருந்தார். உண்மையான போர்நிறுத்தத்துக்கான அழைப்பாக இது தெரியவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.