பத்து நிமிட இடைவெளிகளில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்!!

19 பங்குனி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 10123
பிரான்சின் தென்கிழக்கு நகரமான நீசில் (Nice - Alpes-Maritimes) நேற்று மாலை இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
மார்ச் 18, நேற்று செவ்வாக்கிழமை மாலை 6.45 மணிக்கு முதலாவது நிலநடுக்கம் பதிவானது. 4.1 எனும் Magnitude அளவில் அது இருந்ததாகவும், அங்கு வசிக்கும் மக்கள் இந்த அதிர்வை உணர்ந்ததாகவும் சமூகவலைத்தளங்களில் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
பின்னர், 10 நிமிட இடைவெளியில் 6.55 மணி அளவில் மீண்டும் நிலநடுக்கம் பதிவானது. அது 2.1 Magnitude எனும் சிறிய நிலநடுக்கமாகும்.
இந்த இரு நிலநடுக்கங்களினால் காயங்களோ, சேதங்களோ ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறாயினும் நூற்றுக்கும் மேற்பட்ட அவசரகால தொலைபேசி அழைப்புகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1