Paristamil Navigation Paristamil advert login

காய்கறி குருமா

காய்கறி குருமா

19 பங்குனி 2025 புதன் 15:06 | பார்வைகள் : 270


அனைத்து வீடுகளிலும் பொதுவாக தோசை சாம்பார் என்று தினமும் செய்து கொண்டிருப்பதினால் சாம்பார் மீதோ அல்லது தோசையின் மீது ஒரு வெறுப்பு வந்துவிட்டது. ஆனால் தோசைக்கு சப்பாத்திக்கும் இட்லிக்கும் இந்த குருமா குழம்புடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவ்வளவு ருசியாக இருக்கும்.குறிப்பாக இதில் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி வகைகளை சேர்த்து சமைப்பதால் ஆரோக்கியமான உணவு என்பதால் வாரம் ஒரு முறையேனும் குருமா குழம்பு செய்து சாப்பிடுங்கள். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :எண்ணெய் - 2 tbsp, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 1, வெங்காயம் - 2, தக்காளி - 3, கருவேப்பிலை - சிறிதளவு,இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp, உப்பு - தே.அமிளகாய் தூள் - 1 tsp, தனியா தூள் - 1 tsp, கரம் மசாலா - 1 tsp, கரம் மசாலா - 1 tsp, மஞ்சள் தூள் - 1/4 tsp, கேரட் - 1 கப், பீன்ஸ் - 1 கப், பட்டாணி - 1 கப்உருளைக்கிழங்கு - 1 கப், காலிஃப்ளவர் - 1 கப்தண்ணீர் - 2 கப், கொத்தமல்லி - சிறிதளவு

மசலா பேஸ்ட் அரைக்க :தேங்காய் - 1/2 கப், முந்திரி - 9, வறுத்த கடலை பருப்பு - 1 tbsp, சோம்பு - 1 tsp

செய்முறை :முதலில் அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பேஸ்ட்டை அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் விட்டு பட்டை , இலவங்கம் சேர்த்து தாளிக்கவும்.,பின் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி குழையுமாறு வதங்கியதும் தூள் வகைகளை சேர்த்து வதக்குங்கள்.

பச்சை வாசனை போனதும் அனைத்து காய் வகைகளையும் சேர்க்கவும்.தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு தட்டுபோட்டு மூடவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த தேங்காய் பேஸ்டை சேர்த்து கலந்துவிட்டு மீண்டும் மூடிவிட்டு 10 நிமிடங்களுக்குக் கொதிக்கவிடவும்.இறக்கியதும் கொத்தமல்லி தழை தூவிவிடவும். அவ்வளவுதான் சுவையான குருமா ரெடி.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்