Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வாகன இறக்குமதி குறித்து அதிவிசேட வர்த்தமானி

இலங்கையில் வாகன இறக்குமதி குறித்து அதிவிசேட வர்த்தமானி

20 பங்குனி 2025 வியாழன் 06:06 | பார்வைகள் : 453


இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்குவதற்காக ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறித்த வாகனங்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான பரிசோதனை உறுதிப்படுத்தலைப் பெற்றுக் கொள்ளும் பணியகத்துக்கு அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்குக் காணப்பட்ட ஏனைய தடைகளும் இந்த வர்த்தமானி அறிவித்தலினூடாக நீக்கப்பட்டுள்ளது. 

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்காக வழங்கப்படும் ஜப்பானின் ஏற்றுமதி பரிசோதனை சான்றிதழைப் பெற்றுக் கொண்ட நிறுவனங்களுக்கு அந்த வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. 

இந்தநிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் ஜப்பான் உள்ளிட்ட சகல நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான பரிசோதனை சான்றிதழை ஏற்றுக் கொள்ளும் வகையிலான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பம் மெரஞ்சிகே தெரிவித்தார். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்