Paristamil Navigation Paristamil advert login

தாய், மகள் பலியாக காரணமாக இருந்த இருவர் கைது!!

தாய், மகள் பலியாக காரணமாக இருந்த இருவர் கைது!!

20 பங்குனி 2025 வியாழன் 14:51 | பார்வைகள் : 1206


வீடொன்றில் பரவிய தீ காரணமாக தாய் மற்றும அவரது 13 வயதுடைய மகள் பலியான சம்பவம் Meaux (Seine-et-Marne) நகரில் கடந்த வாரம் இடம்பெற்றது. இச்சம்பவம் விபத்து இல்லை என தெரிவிக்கப்படு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை நள்ளிரவு Meaux (Seine-et-Marne) நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடடம் ஒன்றில் தீ பரவியிருந்தது. இதில் 36 வயதுடைய பெண்ணும் அவரது 13 வயதுடைய மகளும் பலியாகியிருந்தனர். அவரது மற்றொரு மகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த தீ பரவலுக்கு அதே கட்டிடத்தின் தரை தளத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இரு வீடற்றவர்களே காரணம் என தெரிவிக்கப்பட்டு அவ்விருவரையும் காவல்துறையினர் நேற்று புதன்கிழமை கைது செய்தனர்.

மேலதிக விபரங்களை காவல்துறையினர் வெளியிட மறுத்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்