இலங்கையில் விமானப்படை பயிற்சி விமானம் விபத்து!

21 பங்குனி 2025 வெள்ளி 06:16 | பார்வைகள் : 530
விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாரியபொல, மினுவங்கெட்டே அருகே இலங்கை விமானப்படையின் k8 பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இலங்கை விமான படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விமானிகள் இருவரும் பரசூட்டின் உதவியுடன் பாதெனிய பகுதியில் தரையிறங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னந்தோப்பு ஒன்றில் விபத்துக்குள்ளான விமானம் முற்றாக எரியுண்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளான மற்றும் விமானிகள் தரையிறங்கிய பகுதிகளுக்கு இரண்டு உலங்கு வானுர்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை விமான படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.