Paristamil Navigation Paristamil advert login

'குட் பேட் அக்லீ' படத்தின் கதை என்ன?

'குட் பேட் அக்லீ' படத்தின் கதை என்ன?

21 பங்குனி 2025 வெள்ளி 08:41 | பார்வைகள் : 282


'விடாமுயற்சி' படத்தின் எதிர்பாராத தோல்விக்கு பின்னர் அஜித் நடிப்பில் அதிகம் எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆக தயாராகியுள்ள திரைப்படம் தான் 'குட் பேட் அக்லீ'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வியாழக் கிழமை திரைக்கு வருகிறது. 'விடாமுயற்சி' ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருந்தாலும், 'குட் பேட் அக்லீ' ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரை விருந்தாக அமையும் என படக்குழு உறுதியாக கூறியுள்ளது.z

இதனை உறுதி செய்யும் விதமாகவே அண்மையில் வெளியான இந்த படத்தின் டீசர் அமைந்ததோடு... ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 32 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்தது. இந்த டீசரை பார்க்கும் போது அஜித் இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடித்ததை பார்க்க முடிந்தது.

குறிப்பாக, அட்டகாசம், தீனா, அசல், என்னை அறிந்தால், பில்லா, ரெட், வேதாளம், வாலி ஆகிய படங்களின் கெட்டப்புகள் மாஸ் காட்டி இருந்தார். இதை தொடர்ந்து, மார்ச் 18ஆம் தேதி ரிலீஸ் ஆன OG SAMBAVAM பாடலின் லிரிக்கல் வீடியோவுக்கும் வேற லெவல் வரவேற்பு கிடைத்தது.

'குட் பேட் அக்லீ' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, சுனில், பிரசன்னா, அர்ஜூன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகளவில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் குவிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படம் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் சிறந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் 'குட் பேட் அக்லீ' படத்தின் கதை குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பேட்டியில் படம் குறித்த சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் AK. அப்படி சொன்னதும் அவரும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால், ஸ்க்ரிப்டில் ரெட் டிராகன் தான் அவருடைய பெயர். இதுவே அஜித்தின் கேரக்டர் பெயர் ரெட் டிராகன் என்று மாறிவிட்டது. இந்த படம் எமோஷனல் காட்சியையும் பிரதிபலிக்கும். படத்தில் எல்லா இடங்களிலும் ஆக்‌ஷன் இருக்காது. ஏனென்றால் ஃபேமிலி ஆடியன்ஷூம் பார்க்க வேண்டும் என்பதால்.... எமோஷனாலாக கனெக்ட் ஆகும் வகையில் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படம் அப்பாவிற்கும் பையனுக்கும் இடையிலான ஒரு பாண்டிங்கை எடுத்து சொல்லும் ஒரு படமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அஜித்தின் ரசிகர்கள் குட் பேட் அக்லீ படத்தை பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் அதே வேளையில் இன்னும் சிலர் இந்தப் படம் ஜப்பான் வெப் சீரிஸான லைக் ஏ டிராகன்: யாகுசா போன்று இருக்குமோ என்று கூறி வருகிறார்கள்.  இந்தப் படத்தில் அஜித்தின் புதிய அவதாரத்தைப் பார்ப்பதற்கு அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படம் குறித்து ஆதிக் பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்