Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானிய வான்வெளியில் பறந்த மர்ம வெள்ளை பலூன்

பிரித்தானிய வான்வெளியில் பறந்த மர்ம வெள்ளை பலூன்

21 பங்குனி 2025 வெள்ளி 14:06 | பார்வைகள் : 785


பிரித்தானியாவில் அண்மையில் பறந்த மர்மமான வெள்ளை பலூன் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

யார் அந்த வெள்ளை பலூனை இயக்கியது? அது ஏன் மெதுவாக பயணித்தது? என்பது குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது.  

இந்த ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் (Hydrogen-filled balloon) ஜேர்மனியின் Burgkirchen an der Alz நகரில் திங்கட்கிழமை மாலை புறப்பட்டது.

அதில் ஏவியேஷன் இன்ஜினீயர் மற்றும் ஸ்கைடைவிங் பயிற்சியாளர் வூசி வாக்னர் (Wuzi Wagner) மற்றும் சாகச பயணி கோல்யா பேக்கர்ட் (Kolja Packard) ஆகியோர் இருந்தனர்.

இந்தப் பயணத்திற்கான அடிப்படை திட்டம், ஜேர்மனியில் இருந்து புறப்பட்டு முதலில் இங்கிலாந்தை அடைய வேண்டும் என்பதாக இருந்தது. பின்னர் வடக்கு பகுதிகள் வரை செல்ல வேண்டும் என்று திட்டமிட்டனர்.

செவ்வாய்க்கிழமை மாலை 5:00 (GMT) மணிக்கு எசெக்ஸ் (Essex) பகுதியில் பிரித்தானிய வான்வெளிக்குள் நுழைந்தது.

பின்னர் கேம்பிரிட்ஜ்ஷையர், மிட்லாண்ட்ஸ், யார்க்ஷையர், கவுண்டி டர்ஹாம் வழியாக பயணித்தது.


புதன்கிழமை மதியம் எடின்பர்க் (Edinburgh) அருகே உள்ள National Museum of Flight அருகே இறங்கியது.

ஸ்காட்லாந்தை அடைய வேண்டும் என்பதே தனது நீண்டகால கனவு என்றும், அவர்கள் ஒரு நாள் சுற்றுலா மேற்கொண்டு பின்னர் ஐரோப்பாவிற்கு கப்பலில் திரும்புவார்கள் என்றும் வூசி வாக்னர் தெரிவித்தார்.

51 வயதான கோல்யா பேக்கர்ட், பலூன் பயணத்தில் உலகச் சாதனையை முறியடிக்க முயற்சிக்கிறார்.

கடந்த ஆண்டு அவர் 100 மணி நேரத்திற்கும் அதிகமாக பலூனில் பயணித்து சாதனை படைத்தார். இப்போது, இந்த ஆண்டு நடக்கவுள்ள பலூன் போட்டியில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த மர்மப்பயணம் பலரது கவனத்தையும், வியப்பையும் பெற்றுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்