இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

21 பங்குனி 2025 வெள்ளி 15:41 | பார்வைகள் : 284
தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாவது வாசிப்பு.114 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாவது வாசிப்புக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 114மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
அதேவேளை சிறீதரன் எம்.பி தலைமையிலான தமிழரசுக்கட்சியும் சுயேட்சைக்குழு 17 இன் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பியுமான இ.அர்ச்சுனா உட்பட 23 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.