Paristamil Navigation Paristamil advert login

வெறும் கையில் முழம் போடும் தி.மு.க; அண்ணாமலை குற்றச்சாட்டு

வெறும் கையில் முழம் போடும் தி.மு.க; அண்ணாமலை குற்றச்சாட்டு

22 பங்குனி 2025 சனி 07:07 | பார்வைகள் : 2063


திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல், வெறும் கையில் முழம் போடுவதை தி.மு.க.,வினரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;

மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வாங்க இந்த ஆண்டு ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, சட்டசபையில் தமிழக நிதியமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், உயர்கல்வி மானியக் கோரிக்கையிலோ அல்லது தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையிலோ இந்தத் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் அமைச்சர்? தமிழக மாணவர்களையா?

எப்படியும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இயலாது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பிறகு ஏன் இந்த வெற்று அறிவிப்பு?

நிதியே ஒதுக்காமல், இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என எப்படி கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் சட்டமன்றத்தில் பேசுகிறார் தமிழக நிதியமைச்சர்?

மானியக் கோரிக்கையில், விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எந்த நிதியை வைத்து, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப் போகிறார், எப்போது வழங்கப் போகிறார் என்பதை அமைச்சர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை அண்ணாமலை அறிக்கையுடன் வீடியோ வடிவிலும் சுட்டிக்காட்டி உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்