Paristamil Navigation Paristamil advert login

வெளிநாட்டினரின் சட்ட பாதுகாப்பை ரத்து செய்த ட்ரம்ப்

வெளிநாட்டினரின் சட்ட பாதுகாப்பை ரத்து செய்த ட்ரம்ப்

22 பங்குனி 2025 சனி 07:21 | பார்வைகள் : 7149


அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் தீவிரமாக எடுத்து வருகிறார்.

இதில்  பல வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய நாடுகளில் குடியேறிய 5.32 லட்சம் பேரின் சட்டப் பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ரத்து செய்துள்ளது.

இவர்கள் கடந்த ஜோபைடன் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் 2 ஆண்டு மனிதாபிமான பரோல் திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் குடியேறினர்.

இவர்கள் அமெரிக்காவில் வாழவும், வேலை செய்யவும் 2 ஆண்டுகள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது சட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதால் அவர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் சூழலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்