இன்று நாடு தழுவிய போராட்டம்!! கட்சி பேதம் காரணமா?

22 பங்குனி 2025 சனி 10:18 | பார்வைகள் : 776
இன்று பிரான்ஸ் முழுவதும் France insoumise கட்சியும் மேலும் பல சங்கங்கள் இணைந்து பெரும் போராட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டத்திள் முக்கிய களமாகப் பரிஸ் உள்ளது.
தீவிர வரதுசாரிகளை எதிர்த்து, இந்தப் பேராட்டம் மற்றும் பேரணிகளை இந்தக் கட்சியும் சங்கங்களும் மேற்கொள்கின்றன.
இந்தப் பேரணி இன்று 14h00 மணியிலிருந்து குடியரசு சதுக்கமான Place de la République இல் Nation வரை செல்ல உள்ளது.
இதனால் பரிசிற்குள் போக்குவரத்துக்கள் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என பரிசின் காவற்துறைத் தலைமையகம் எச்சரித்துள்ளது.
இதனை ஏற்பாடு செய்த கட்சியின் தலைவரான ஜோன்-லுக்- மெலோன்சோன் (Jean-Luc Mélenchon) இந்தப் போராட்டத்தில் தங்களுடன் 200 சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
இது கட்சிகளிற்கு எதிரான போராட்டத்தில் தேவையற்று, மக்களைப் பெரும் சிக்கலிற்கு உள்ளாக்கின்றனர் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தப் பேரணியால், பெருமளவான காவற்துறiயினர் பரிசில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.