வெடித்து சிதறிய எரிமலையால் விமான சேவைகள் இரத்து

22 பங்குனி 2025 சனி 14:57 | பார்வைகள் : 510
இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவில் உள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்துள்ளமையால் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மூன்று முறை இந்த எரிமலை வெடித்துள்ளதாகவும், அதில் இருந்து சுமார் 26 ஆயிரம் அடி தூரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறி வருவதாகவும் கூறப்படுகின்றது.
அவுஸ்திரேலியா-இந்தோனேசியா இடையே செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர். எரிமலை வெடித்ததால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.