ஜேர்மனியின் உதவிக்கு நன்றி: உக்ரைன் ஜனாதிபதி

22 பங்குனி 2025 சனி 17:40 | பார்வைகள் : 529
உக்ரைனுக்கு கூடுதலாக மூன்று பில்லியன் யூரோக்கள் வழங்க ஜேர்மனி முடிவு செய்துள்ள நிலையில், ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.
2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில், உக்ரைனுக்கு 4 பில்லியன் யூரோக்கள் வழங்க ஜேர்மனி முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டில் மேலும் 3 பில்லியன் யூரோக்களும், 2026 முதல் 2029 வரையிலான காலகட்டத்தில் 8 பில்லியன் யூரோக்களும் உக்ரைனுக்கு வழங்க தற்போது ஜேர்மன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கமிட்டி முடிவு செய்துள்ளது.
உக்ரைனுக்கு நிதி உதவி வழங்க ஜேர்மனி முடிவு செய்துள்ளதை வரவேற்றுள்ளார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.
அது தொடர்பாக அவர் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், நிதி உதவி வழங்கும் ஜேர்மனியின் முடிவுக்காக ஜேர்மன் மக்களுக்கும், அரசுக்கும், தற்போதைய சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸுக்கும், அடுத்த சேன்சலராக பதவியேற்க இருக்கும் பிரெட்ரிக் மெர்ஸுக்கும், தான் மனமார நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஜெலன்ஸ்கி.