நாட்டை நிலைகுலையச் செய்யும் மார்டின்ஹோ புயல்!

22 பங்குனி 2025 சனி 18:49 | பார்வைகள் : 2511
போர்த்துக்கலில் இருந்து புறப்பட்ட இந்த மார்டின்ஹோ (Martinho) புயல், கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பிரான்சில் பல காலநிலை மாற்றங்களையும் பெரும் சேதங்களையும் விளைவித்துள்ளது.
காலநிலை மாற்றம், கடும் புயற்காற்று, வெள்ளப்பெருக்கு, பெரும் மழை எனப் பல எச்சரிக்கைகள் தொடர்ந்தும் பிரான்சின் வானிலை அவதானிப்பு மையத்தினால் விடுக்கப்பட்டு வருகின்றது.
நாளை ஞாயிற்றுக்கிழைமையும் பல மாவட்டங்களிற்கு கடும் புயல் மழை எச்சரிக்கையும், மேலும் பல மாவடடங்களிற்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இது பிரான்சில் வெப்பநிலை வீழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.