இடிமின்னல், மழை, வெள்ளம் : சீரற்ற காலநிலை!!

23 பங்குனி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 2478
இன்று மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடி மின்னல் மழை!
இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என 14 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கிழக்கு மாவட்டங்கள் தென்கிழக்கு மாவட்டங்களான Moselle, Meurthe-et-Moselle, Vosges, Hautes-Alpes, Drôme, Hérault, Gard, Bouches-du-Rhône, Var, Vaucluse, Alpes-de-Haute-Provence, Alpes-Maritime, Haute-Corse மற்றும் Corse-du-Sud ஆகிய 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம்!
அதேவேளை, Ardèche, Aveyron, Drôme, Gard, Lozère, Somme மற்றும் Vaucluse ஆகிய ஏழு மாவட்டங்களில் இடி மின்னல் மழையுடன் வெள்ளப்பெருக்கும் ஏற்படும் என தெரிவிக்கப்படுள்ளது.