சிறைக்கைதிகளில் பெருமளவான வெளிநாட்டவர் - நாட்டிற்கு அனுப்ப வேண்டும்!!

23 பங்குனி 2025 ஞாயிறு 08:03 | பார்வைகள் : 3128
பிரான்சின் சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டு, பெரும் நெருக்கடியாக உள்ள விடயம் தொடர்ந்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றது. இதனால் சிறைக்காவலர்கள் பணிப்புறக்கணிப்புக் கூடச் செய்துள்ளனர்.
இதற்கான ஒரு தீர்வை, முன்னாள் உள்துறை அமைச்சரும் தற்போதைய நீதி அமைச்சருமான, ஜெரால்ட் தர்மனன் தெரிவித்துள்ளார்»
«பிரான்சின் சிறைகளில் மொத்தமாக 62.000 கைதிகளிற்கான இடம் மட்டுமே உள்ளது. ஆனால் இன்று 82.000 கைதிகள் சிறையில் அiஅக்கப்பட்டுள்ளனர். இதனால் 4.000 கைதிகள் வெறும் மெத்தைகளில் மட்டும் படுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது»
«இதனைப் பகுப்பாய்வு செய்ததில் சிறைக்கைதிகளில் 19.000 பேர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள வெளிநாட்டவர்கள். இவர்களை அந்தந்த நாட்டிற்குத் திருப்பியனுப்பி, அந்தந்த நாடுகளில் அவர்களிற்கான தண்டனைகளைத் தொடர வைக்க வேண்டும்»
«இதன் மூலம் பிரான்சின் சிறைகளின் நெருக்கடி நீக்கப்படும்»
எனத் தெரிவித்துள்ளார்.