Flamanville அணுமின் நிலையத்தில் கசிவு!!

23 பங்குனி 2025 ஞாயிறு 08:15 | பார்வைகள் : 2618
Flamanville அணுமின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டதை அடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த மின்நிலையம் கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி முதல் திருத்தப்பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்ட்டுள்ளது. திருத்தப்பணிகள் முழு மூச்சாக இடம்பெற்று வந்த நிலையில், நேற்று மார்ச் 22 ஆம் திகதி முதலாம் யூனிட் தொகுதியில் (réacteur n°1 de Flamanville) கசிவு ஒன்று ஏற்பட்டது. நண்பகல் 12.30 மணி அளவில் ஆபத்தான நீராவி வாயு காற்றில் பரவியதாகவும், உடனடியாக அடையாளம் காணப்பட்டு, அணுமின் நிலையத்தின் திருத்தப்பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அணுமின் நிலையம் திருத்தப்பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்ததால், பெரும் ஆபத்துக்கள் தவிர்க்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அணுமின் நிலையம் திறக்கப்படும் திகதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.