நடுக்கடலில் தத்தளித்த படகு - 57 அகதிகள் மீட்பு!!

23 பங்குனி 2025 ஞாயிறு 10:00 | பார்வைகள் : 672
வடக்கு கடற்கரை வழியாக பிரித்தானியா நோக்கி பயணித்த 57 அகதிகளை பிராந்திய செயற்பாட்டு கண்காணிப்பு மற்றும் மீட்பு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மார்ச் 21, வெள்ளிக்கிழமை Hardelot (Pas-de-Calais) நள்ளிரவு அகதிகளை ஏற்றிக்கொண்டு சிறிய காற்றடைக்கப்பட்ட படகு ஒன்று பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளது. மிக ஆபத்தான பயணத்தை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த centre régional opérationnel de surveillance et de sauvetage (CROSS) அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், அகதிகளை மீட்டுள்ளனர்.
குறித்த படகு இயந்திரக்கோளாறு ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்ததாகவும், அதன் பின்னரே CROSS அதிகாரிகள் அவர்களை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 57 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.