டெஸ்லா மீதான வெறுப்பு அதிகரிப்பு.. தாக்குதல்களும் - விற்பனை வீழ்ச்சியும்..!!

23 பங்குனி 2025 ஞாயிறு 11:10 | பார்வைகள் : 1945
டெஸ்லா மகிழுந்துகளின் விற்பனை மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மகிழுந்துகள் மீது தாக்குதல்களும் பதிவாகியுள்ளன.
டெஸ்லா நிறுனத்தின் உரிமையாளரும், உலகின் முதலாவது பணக்காரருமான எலான் மஸ்கின் பாசிச நடவடிக்கை காரணமாக இந்த எதிர்ப்பு மனநிலை பிரெஞ்சு மக்களிடையே தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுகிறது. கடந்த ஒரு மாதத்தில் பிரான்சில் டெஸ்லா மகிழுந்துகளின் விற்பனை கணிசமாக சரிந்துள்ளதாகவும், சில காட்சியறைகளில் 50% சதவீதமாக அது வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, டெஸ்லா நிறுவனம் விளம்பரங்களை அதிகரித்துள்ளதோடு, மகிழுந்து ஒன்றுக்கு €3,000 யூரோக்கள் வரை தள்ளுபடியும் வழகியுள்ளது.
அதேவேளை, Toury (Eure-et-Loir) நகரில் உள்ள காட்சியறை ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருந்த 15 டெஸ்லா மகிழுந்துகளின் முன்பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, டெஸ்லா மகிழுந்துகள் மீது தாக்குதல்களும் பதிவாகி வருகிறது. பல விற்பனையகங்கள் உடைக்கப்பட்டும் உள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் மேற்கு பிரான்சில் காட்சி அறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டெஸ்லா மகிழுந்துகள் சில எரியூட்டப்பட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
டெஸ்லா மகிழுந்து வைத்திருக்கும் உரிமையாளர்கள் சிலர் ”எனது மகிழுந்தை சேதப்படுத்த வேண்டாம். நானும் அவரை வெறுக்கிறேன்!” என வசனம் எழுதி மகிழுந்தில் வைப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இதேபோன்ற வசனங்கள் எழுதப்பட்டு மகிழுந்தில் காட்சிப்படுத்திய சம்பவம் அமெரிக்காவில் பெரும் பிரபலம். அதை அடிப்படையாக கொண்டு பிரான்சிலும் பின்பற்றப்படுகிறது.