விஜய் - சிவகார்த்திகேயன் படங்கள் மோதுகிறதா ?

23 பங்குனி 2025 ஞாயிறு 13:07 | பார்வைகள் : 305
விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’பராசக்தி’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் முதலும் கடைசியாக மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக . விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படும் இந்த படம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்பாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், அநேகமாக அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ’பராசக்தி’ படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக, இந்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
எனவே விஜய்யின் கடைசி படம் சிவகார்த்திகேயன் படத்துடன் மோத இருக்கிறது என்று வெளிவந்த தகவலுக்கு பிறகு, இது விஜய்-சிவகார்த்திகேயன் படங்கள் மோதும் முதல் மற்றும் கடைசி நேரடி போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
இருப்பினும், இரு படங்களின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியான பிறகே இந்த மோதல் உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.