தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அஜித்?
23 பங்குனி 2025 ஞாயிறு 13:12 | பார்வைகள் : 2166
தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிப்பது குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உறுதி செய்துள்ளார்.
யூடியூப் நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவரிடம் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, விரைவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விளக்கம் தந்தார்.
அதே போல், தனுஷ் இயக்கத்தில் அஜித்தை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், அது குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறினார்.
அஜித் நடிப்பில் அடுத்ததாக 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன் பிறகு அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
காரணம் அஜித் தற்போது கார் ரேஸிங்கில் பிஸியாக இருக்கிறார். தனுஷை பொறுத்தவரை அவரது இயக்கத்தில் அடுத்ததாக 'இட்லி கடை' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan