Paristamil Navigation Paristamil advert login

மருத்துவமனையாக மாறிய வெடிமருத்து தொழிற்சாலை!!

மருத்துவமனையாக மாறிய வெடிமருத்து தொழிற்சாலை!!

20 பங்குனி 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 21524


தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழமையான கட்டிடங்கள்... முன்னர் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருப்பது நாம் கேள்விப்பட்ட ஒன்றுதான்.  லூவர் மியூசியம் கூட முன்னதாக சேமிப்புக்கிடங்காக இருந்ததாம்!! அதை விடுங்கள்... இங்கு வெடிமருந்து தொழிற்சாலை ஒன்று.. தன் தொழிலை மாற்றிக்கொண்டு மருத்துவமனையாக மாறிவிட்டது!! 
 
Pitié-Salpêtrière - பரிசில் உள்ள மிக முக்கிய வைத்தியசாலை!! அவசர உதவி பிரிவு, இன்னபிற சிகிச்சை வசதிகள், 1,603 நோயாளிகள் தங்கும் கட்டில்கள் என அனைவராலும் நன்கு அறியப்பட்ட இவ் மருத்துவமனை, ஐரோப்பாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்று. இவ்மருத்துவமனை குறித்த தகவல்களை முன்னதாக பிரெஞ்சு புதினத்தில் வழங்கியிருந்தோம். ஆனால் அது எப்படி மருத்துவமனையாக தோற்றம் பெற்றது?
 
13 ஆம் வட்டாரத்தில் இந்த மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டது வெடிப்பொருட்கள், வெடி மருந்துகள் போன்றவற்றை தயாரிப்பதற்கு. ஆனால் 14 ஆம் லூயி மன்னன், 1656 ஆம் ஆண்டு அதை ஏழைகளுக்கான மருத்துவ மனையாக மாற்றிவிட்டான். இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டது. ஒன்று இந்த அழகான கட்டிடம் ஒரு 'வெடிமருந்து தொழிற்சாலை!' என அடையாளப்படுத்தப்பட்டது. இத்தனை அழகான கட்டிடத்தை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தலாமே என்ற கருத்து பரவ ஆரம்பித்தது. இரண்டாவது பரிசின் மக்கள் பெருக்கம். மருத்துவமனைகளின் தேவைகள் அதிகரிக்க... சட்டென மருத்துவமனையாக மாற்றப்பட்டதே Pitié-Salpêtrière மருத்துவமனை!!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்