Essonne : மீண்டும் கத்திக்குத்து சம்பவம்.. மாணவன் பலி!!

24 பங்குனி 2025 திங்கள் 18:20 | பார்வைகள் : 9423
இன்று மார்ச் 24, திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் மாணவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இல்-து-பிரான்சுக்குள் கடந்த 10 நாட்களில் இடம்பெறும் மூன்றாவது கத்திக்குத்துச் சம்பவம் இதுவாகும்.
Yerres (Essonne) நகரில் உள்ள Louis-Armand உயர்கல்வி பாடசாலைக்கு மிக அருகே இந்த தாக்குதல் மாலை 5 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் இடம்பெற்றதாக மருத்துவக்குழுவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவன் ஒருவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இருந்த போதும், சிகிச்சை பலனின்றி குறித்த மாணவன் பலியாகியுள்ளார். 17 வயதுடைய உயர்கல்வி மாணவனே கொல்லப்பட்டதாகவும், பல்வேறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1