முகமட் அம்ரா வழக்கு.. மேலும் 24 பேர் கைது!!

24 பங்குனி 2025 திங்கள் 18:32 | பார்வைகள் : 2622
பிரான்சில் இருந்து தப்பிச் சென்ற போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியான முகமட் அம்ரா, ருமேனிய தலைநகரில் வைத்து பெப்ரவரி 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அதை அடுத்து, மேற்படி வழக்கில் தொடர்புடைய பலர் அடுத்தடுத்த நாட்களில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று மார்ச் 23 ஆம் திகதி 24 பேர் புதிதாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பிரெஞ்சு சொல்லிசை பாடகர் Koba LaD உம் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
24 பேர்களில் இருவர் ஜேர்மனியிலும், ஏனையவர்கள் பிரான்சிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 27 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கைது எண்ணிக்கை 50 இற்கும் அதிகமாகச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முகமட் அம்ரா, கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் போது, சிறைச்சாலை வாகனத்தை ஆயுதங்கள் மூலம் தகர்த்து, இரு காவல்துறையினரை சுட்டுக்கொன்று தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.