சிறுவன் Emile கொலை தாத்தா, பாட்டி உட்பட நால்வர் கைது.

25 பங்குனி 2025 செவ்வாய் 11:01 | பார்வைகள் : 4357
கடந்த 08 யூலை 2023 Haut-Vernet (Alpes-de-Haute-Provence) பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தன் தாய்வழி தாத்தா, பாட்டியுடன் விடுமுறையை கழிக்க சென்ற போது இரண்டு வயதான Emile என்னும் சிறுவன் காணமல் போனான். அதனையடுத்து நீண்ட நெடிய தேடுதல் வேட்டை பொதுமக்களாலும், காவல்துறையினராலும் நடத்தப்பட்டது இருப்பினும் சிறுவன் கண்டுபிடிக்க படவில்லை.
மிகுந்த தொழில்நுட்பம் நிறைந்த ஒளிப்பதிவு கருவிகள் பொருத்திய உலங்குவானூர்திகள், மலைகளில் தேடுதல் வேட்டை நடாத்தும் சிறப்பு பயிற்சி பெற்ற படைவீரர்கள், பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் என பெரும் எடுப்பிலான தேடுதல் வேட்டை பல நாட்களாக நீடித்தும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் சிறுவன் காணாமல் போன கிராமத்திலிருந்து 1.7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றும் ஒரு கிராமத்தில் நடை பயிற்சிக்குச் சென்ற பெண் ஒருவர் மார்ச் 2024 ஒரு சிறுவனின் மண்டை ஓட்டையும் அவனுடைய எலும்பு பகுதிகளையும் கண்டெடுத்தார் அதனை அடுத்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் சிறுவனுடைய தாய் வழி தாத்தா பாட்டி அவர்களின் மகன் , அவரின் மனைவி என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்தல் நடந்த கொலையை மறைத்தல் போன்ற பல்வேறு பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் தற்பொழுது விசாரணை கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் தாத்தா பாட்டி வசித்து வந்த வீடும் காவல்துறையினரால் சோதனைகள் செய்ப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது இது குறித்த மேலதிக தகவல் இன்னும் வெளியாகவில்லை.