Paristamil Navigation Paristamil advert login

நாளை பரிசுக்கு வருகிறார் செலன்ஸ்கி.. வியாழக்கிழமை மாநாடு!!

நாளை பரிசுக்கு வருகிறார் செலன்ஸ்கி.. வியாழக்கிழமை மாநாடு!!

25 பங்குனி 2025 செவ்வாய் 12:00 | பார்வைகள் : 1239


மார்ச் 27 ஆம் திகதி வியாழக்கிழமை பரிசில் ஐரோப்பிய பாதுகாப்பு உச்சிமாநாடு இடம்பெற உள்ளமை அறிந்ததே. இதில் பங்கேற்க யுக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி ஒரு நாள் முன்னதாக நாளை பரிசுக்கு வருகிறார்.

எலிசே மாளிகையில் வைத்து மக்ரோன் - செலன்ஸ்கி இருவரும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது யுக்ரேனுக்கான தேவைகள் குறித்து செலன்ஸ்கி மக்ரோனுடன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இடம்பெற உள்ள உச்சிமாநாட்டில், யுக்ரேனுக்கான ஆயுங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவது தொடர்பில் முன்னுரிமையுடன் கலந்துரையாடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்