செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

26 பங்குனி 2025 புதன் 10:38 | பார்வைகள் : 1049
சென்னையில் நேற்று ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஜாபர் குலாம் (28), என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னையில் நேற்று காலை, 6:00 முதல் 7:10 வரையிலான, ஒரு மணி நேரம், 10 நிமிடங்களில், சைதாப்பேட்டையில் துவங்கி வேளச்சேரி வரை, ஆறு பெண்களிடம், 22 சவரன் வரை செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மும்பையை சேர்ந்த ஜாபர் குலாம் ஹூசைன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே, திருடிய நகைகளை மீட்க சென்ற போது, போலீசாரை தாக்கி, ஜாபர் தப்ப முயற்சி செய்தார். அப்போது தற்காப்புக்காக, இன்ஸ்பெக்டர் முகமது புகாரி சுட்டதில், கொள்ளையன் உயிரிழந்தார். ஜாபர் மீது 50க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.