கொள்ளைச் சம்பவம் : பரிசுக்கு அழைக்கப்படுகிறார் கிம் கடாஷியன்!!

26 பங்குனி 2025 புதன் 14:59 | பார்வைகள் : 6123
மொடலும், தொலைக்காட்சி தொகுப்பாளியும், தொழிலதிபருமான கிம் கடாஷியனை (Kim Kardashian) பரிஸ் நீதிமன்றம் அழைத்துள்ளது.
கிம் கடாஷியனது வீட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி இரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. பல மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள நகைகளை கொள்ளையர்கள் சிலர் சூறையாடிச் சென்றிருந்தனர். இது தொடர்பில் ஏற்கனவே காவல்துறையினருக்கு அவர் போதிய விளக்கம் அளித்திருந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாக உள்ளது.
தற்போது அமெரிக்காவில் இருக்கும் கடாஷியன் இந்த நீதிமன்ற விசாரணைகளுக்காக பரிசுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் மே 23 ஆம் திகதி வரை நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற உள்ளன.
€5.5 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. அவற்றில் அவருடய மோதிரம் மட்டும் €3.7 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது.