பிரெஞ்சு தொலைக்காட்சியில் தோன்றுகிறார் செலன்ஸ்கி!!

26 பங்குனி 2025 புதன் 16:19 | பார்வைகள் : 2468
நாளை வியாழக்கிழமை இடம்பெற உள்ள ஐரோப்பிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள யுக்ரேனிய ஜனாதிபதி செலன்ஸ்கி சற்றுமுன்னர் பரிசை வந்தடைந்தார்.
எலிசே மாளிகையில் வைத்து அவரை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரவேற்கிறார். பின்னர் இருவரும், இரவு இடம்பெறும் இரவு விருந்துபசாரத்தில் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், செலன்ஸ்கி பிரெஞ்சு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கந்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
France 2, Franceinfo TV போன்ற தொலைக்காட்சிகளில் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாகும்.