இந்தியர்கள் குடியேற விரும்பும் வெளிநாடுகள் எவை? ஆய்வு சொல்வது இதுதான்!

27 பங்குனி 2025 வியாழன் 10:57 | பார்வைகள் : 342
22 சதவீதத்திற்கும் அதிகமான வசதி படைத்த இந்தியர்கள், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடாவில் குடியேற விரும்புகின்றனர்'' என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பணக்கார இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரித்து வருகிறது. வெளியுறவு அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின் படி ஆண்டுக்கு 25 லட்சம் இந்தியர்கள் உலகின் பிற நாடுகளில் குடியேறுகின்றனர். வெளிநாடுகளில் பணக்கார இந்தியர்கள் குடியேறுவது தொடர்பாக, கோடக் மற்றும் இ.ஒய்., கன்சல்டன்சி சார்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதிக சொத்து மதிப்பு கொண்ட இந்தியர்கள் 122 பேர் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றனர். அதன் முடிவில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: 22 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற விரும்புகின்றனர். அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் குடியேற விரும்புகின்றனர்.
குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் வழங்கப்படும் கோல்டன் விசா திட்டம் முக்கியம் பங்கு வகிக்கிறது. பெரும்பாலானோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் தக்க வைத்துக் கொண்டு விருப்பமான நாட்டில் நிரந்தரமாக வசிக்க விரும்புகிறார்கள்.
வாழ்க்கைத் தரம், கல்வி உள்ளிட்டவற்றை மேம்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.