யுக்ரேனுக்கு €2 பில்லியன் யூரோக்கள்! - மக்ரோன் அறிவிப்பு!!

27 பங்குனி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 4222
யுக்ரேனுக்கு €2 பில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய இராணுவ உபகரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி மக்ரோன் உறுதியளித்துள்ளார்.
நேற்று எலிசே மாளிகையில் வைத்து ஜனாதிபதி மக்ரோனை யுக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி சந்தித்து உரையாடினார். அதன் போது இதனை மக்ரோன் தெரிவித்தார். €2 பில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள ஆயுயங்கள், தளபாடங்களை பிரான்ஸ் யுக்ரேனுக்கு வழங்க உள்ளதாகவும், ரஷ்ய ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட யுக்ரேனை வலுப்படுத்தவேண்டிய உறுதிப்பாடு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நவீன AMX-10 RC ரக கவச வாகனங்களும் இந்த பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இன்று மார்ச் 27, வியாழக்கிழமை பரிசில் ஐரோப்பிய பாதுகாப்பு மாநாடு பிரான்ஸ் தலைமையில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.