CAF : திகதி மாற்றம்!!

27 பங்குனி 2025 வியாழன் 07:10 | பார்வைகள் : 4155
ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும் குடும்பநல கொடுப்பனவுகளில் திகதி மாற்றப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அன்றைய திகதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால், மறுநாள் 6 ஆம் திகதி கொடுப்பனவுகள் வங்கியில் வைப்பிலிடப்படும்.
ஆனால் இம்முறை 5 ஆம் திகதி சனிக்கிழமை நாளில் வருகிறது. இதனால் அடுத்து வரும் திங்கட்கிழமை ஏப்ரல் 7 ஆம் திகதி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவ்வாறாக இல்லாமல், ஒருநாள் முன்பாக ஏப்ரல் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமையே கொடுப்பனவுகள் வைப்பிலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.