Paristamil Navigation Paristamil advert login

வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு சொந்த நாடுகளில் சிறை.. பிரெஞ்சு மக்கள் ஆதரவு!!

வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு சொந்த நாடுகளில் சிறை.. பிரெஞ்சு மக்கள் ஆதரவு!!

27 பங்குனி 2025 வியாழன் 09:00 | பார்வைகள் : 6072


பிரான்சில் சிறைவைக்கப்பட்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கு - அவர்களது நாடுகளிலேயே சிறை வைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்துக்கு பெருவாரியான பிரெஞ்சு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக CSA நிறுவனம் மேற்கொண்டிருந்த கருத்துக்கணிப்பில், அரசின் இந்த திட்டத்துக்கு 87% சதவீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  பிரான்சில் சிறைவைக்கப்பட்டுள்ள 82,000  கைதிகளில் 19,000 பேர் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி சிறைவைக்குமாறு பத்தில் கிட்டத்தட்ட ஒன்பது பேர் தெரிவித்துள்ளனர். 13% சதவீதமானவர்கள் அதனை ஆதரவிக்கவில்லை.

பிரான்சில் 62,000 கைதிகளுக்கான இடங்கள் மட்டுமே சிறைச்சாலைகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்