பிரான்சின் பொதுக் கடன் €3.8 பில்லியன் யூரோக்களால் அதிகரிப்பு!

27 பங்குனி 2025 வியாழன் 10:00 | பார்வைகள் : 5304
2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் பிரான்சின் பொதுக்கடன் €3.8 பில்லியன் யூரோக்களால் அதிகரித்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட குறைவானதாகும்.
உள்நாட்டின் மொத்த உற்பத்தியில் (GDP) (produit intérieur brut - PIB) கடன் 5.8% சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 6% சதவீதமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த நிலையில், சற்று குறைவாக பதிவாகியுள்ளது.
தற்போது பிரான்சின் மொத்த கடன் 3,305.3 பில்லியன் யூரோக்களாக (3.3 ட்ரில்லியன் யூரோக்கள்) உள்ளது. சென்ற செப்டம்பரில் இந்த தொகை 3,301.4 பில்லியன் யூரோக்களாக இருந்தது.