Paristamil Navigation Paristamil advert login

தேர்தலுக்கு முன்பே புதிய ஆளுநர்களை நியமித்த ரஷ்ய ஜனாதிபதி

தேர்தலுக்கு முன்பே புதிய ஆளுநர்களை நியமித்த ரஷ்ய ஜனாதிபதி

27 பங்குனி 2025 வியாழன் 16:13 | பார்வைகள் : 881


ரஷ்யாவின் இரு பிராந்தியங்களுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிய தற்காலிக ஆளுநர்களை நியமித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் ரஷ்யாவில் ஆளுநர் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்கு முன்பாக Sverdlovsk மற்றும் Orenburg ஆகிய பிராந்தியங்களுக்கு புதிய தற்காலிக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு ஆணையின்படி, Sverdlovskயின் ஆளுநராக இருந்து Yury Kuivashev விலகுகையில், அவருக்கு பதிலாக டெனிஸ் பாஸ்லர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், Orenburg பிராந்தியத்திற்கு Yevgeny Solntsev ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கிழக்கு உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தில், மாஸ்கோ ஆதரவு அரசாங்கத்தின் முன்னாள் பிரதம மந்திரி ஆவார்.

நியமிக்கப்பட்ட இரண்டு ஆளுநர்களும் தங்கள் புதிய பதவிகளுக்கு தயாராக சில மாதங்கள் தேவை என கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக, ஒரு தொலைக்காட்சி சந்திப்பின்போது பாஸ்லரிடம் ஜனாதிபதி புடின், "நீங்கள் ஏற்கனவே பணியாற்றிய உங்கள் சொந்தப் பகுதிக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

இதற்கிடையில், பாஸ்லரின் மறு நியமனத்தை அரசியல் விமர்சகர்கள், கடந்த ஆண்டு Orenburgயில் ஏற்பட்ட கொடிய வெள்ளத்திற்கு அவர் அளித்த பதில் மற்றும் அமெரிக்காவில் அவரது மகனின் ஹாக்கி வாழ்க்கை தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் இருந்தபோதிலும், ஒரு "பதவி உயர்வு" என்று கருதுகின்றனர்.     

 

வர்த்தக‌ விளம்பரங்கள்