Aulnay-sous-Bois : காவல்துறையினர் மீது தாக்குதல்!!

27 பங்குனி 2025 வியாழன் 18:03 | பார்வைகள் : 1794
பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. மூன்று காவல்துறையினர் மீது 30 பேர் கொண்ட குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அவர்கள் பெற்றோல் எரிகுண்டு வைத்திருந்ததாகவும், வெடி பொருட்கள் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினரின் மகிழுந்துகள் உடைக்கப்பட்டுள்ளன.
அதிஷ்ட்டவசமாக இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.