Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் ஜனாதிபதி சர்கோஷிக்கு ஏழு ஆண்டுகள் சிறை!!

முன்னாள் ஜனாதிபதி சர்கோஷிக்கு ஏழு ஆண்டுகள் சிறை!!

28 பங்குனி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 2373


பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

லிபியாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முகமட் கடாபிக்கு ஆதரவாக செயற்பட்டு அவரது தேர்தல் பரப்புரைக்காக நிதி வழங்கியதாக சர்கோஷி மீதி குற்றம் சாட்டப்பட்டுள்ளது., இது தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு இலத்திரணியல் காப்பு அணிவிக்கப்பட்டு அவர் கண்காணிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், சர்கோஷிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், €300,000 யூரோக்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வேண்டும் என தேசிய நிதி வழக்கறிஞர் அலுவலகம் கோரியுள்ளது.

அவருடன் சேர்த்து மேலும் மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கும் தண்டனை வழங்கப்பட உள்ளது. அமைச்சர் Brice Hortefeux  இற்கு மூன்று ஆண்டுகள் சிறையும், 150,000 யூரோக்கள் குற்றப்பணமும், அமைச்சர்  Claude Guéant இற்கு ஆறு ஆண்டுகள் சிறையும் 100,000 யூரோக்கள் குற்றப்பணமும்,  Eric Woerth இற்கு எதிராக ஓராண்டு சிறையும், 3,750 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்