Paristamil Navigation Paristamil advert login

யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு நேர்ந்த கதி

28 பங்குனி 2025 வெள்ளி 07:02 | பார்வைகள் : 1024


யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புன்னாலைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் புகையிலை தோட்டத்தில் , புகையிலை கன்றுகளுக்கு மத்தியில் மிக சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கஞ்சா செடியை கைப்பற்றினர்.

மீட்கப்பட்ட கஞ்சா செடி சுமார் 4 அடி உயரம் எனவும், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சுன்னாக பொலிஸார் சந்தேக நபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்