இலங்கை செல்லும் இந்தியப் பிரதமர் – 6ஆம் திகதி வரை தங்கியிருப்பார்

28 பங்குனி 2025 வெள்ளி 07:07 | பார்வைகள் : 2306
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 04 முதல் 06 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இந்தியப் பிரதமர் அனுராதபுரத்திற்குச் சென்று புனித ஸ்ரீ மகா போதியில் வழிபாடு நடத்த உள்ளார். மேலும், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார்.
இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.