Paristamil Navigation Paristamil advert login

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

28 பங்குனி 2025 வெள்ளி 11:01 | பார்வைகள் : 913


இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா - 2025 மசோதா மீதான விவாதத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டினர் வருகையை நிர்வகிக்க, பாஸ்போர்ட் சட்டம் - 1920, வெளிநாட்டினர் பதிவு சட்டம் - 1939, வெளிநாட்டினர் சட்டம் - 1946 மற்றும் குடியுரிமை சட்டம் என, நான்கு விதமான சட்டங்கள் தற்போது அமலில் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டங்களை ஓரங்கட்டிவிட்டு, புதிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து, சமீபத்தில் லோக்சபாவில், குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா - 2025ஐ தாக்கல் செய்தது.

லோக்சபாவில் இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: சுற்றுலா, கல்வி சுகாதாரம் மற்றும் வணிகத்திற்காக இந்தியா வருபவர்களை வரவேற்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளபவர்களை கடினமாக கையாள்வோம்.நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல. நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்காக வருபவர்களை எப்போதும் வரவேற்போம்.

இந்த மசோதா, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருளாதாரம் மற்றும் வணிகத்தை ஊக்குவிக்கும். சுகாதாரம் மற்றும் கல்வித்துறைக்கு ஆதரவாக இருக்கும். இந்த மசோதா, இந்தியா வருபவர்களின் அனைத்து தகவல்களும் கிடைப்பதை உறுதி செய்யும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதனைத் தொடர்ந்து குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா -2025 லோக்சபாவில் நிறைவேறியது.

வர்த்தக‌ விளம்பரங்கள்