Paristamil Navigation Paristamil advert login

நவம்பரில் chèque énergie!!

நவம்பரில் chèque énergie!!

29 பங்குனி 2025 சனி 08:00 | பார்வைகள் : 5131


குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பத்தினருக்கு வழங்கப்படும் chèque énergie கொடுப்பனவு இவ்வருடம் நவம்பர் மாதத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட இந்த கொடுப்பனவு, 2025 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. €48 யூரோக்களில் இருந்து €277 யூரோக்கள் வரையுள்ள இந்த கொடுப்பனவு, எரிவாயு-மின்சாரக்கட்டணம் போன்றவற்றைச் செலுத்த சிரமப்படுவோருக்கு வழங்கப்படுகிறது. 
2027 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை இந்த வவுச்சர்கள் பயன்படுத்த முடியும். 

சென்ற 2024 ஆம் ஆண்டில் 5.7 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த chèque énergie காசோலைகள் வழங்கப்பட்டிருந்தது. இவற்றில் 5.5 மில்லியன் 'தானியங்கி முறையில்' அனுப்பட்டது. அதில் 1 மில்லியன் காசோலைகள் பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்