பிரான்சிடம் இருந்து TGV தொடருந்துகளை வாங்கும் மொராக்கோ!!

29 பங்குனி 2025 சனி 08:10 | பார்வைகள் : 4150
அதிவேக TGV தொடருந்துகளை பிரான்சிடம் இருந்து மொராக்க வாங்குவதற்கு வியாபார ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
€751 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள இந்த ஒப்பந்தம் நேற்று மார்ச் 28, வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. Avelia Horizon எனும் இவ்வகை தொடருந்து நவீன வசதிகளுடன், அதிவேகமாக இயங்கும் திறன் கொண்டவை எனவும், பிரான்ஸ் TGV சேவைகளுக்காக அத்தொடருந்துகளையே பயன்படுத்தி வருகிறது.
மொத்தமாக 18 தொடருந்துகளை மொராக்கோ வாங்க உள்ளது.
மொராக்கோவின் Tangier நகரம் முதல் Marrakech நகரம் வரை புதிய சேவைகளை அந்நாட்டு அரசு இயக்க உள்ளது. 640 பயணிககை ஏற்றிக்கொண்டு மணிக்கு 320 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும் இந்த தொடருந்துகள் அடுத்தவருட இறுதிக்குள் மோராக்கோவிடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1