புஷ்கர் - காயத்ரி அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா ?

29 பங்குனி 2025 சனி 09:37 | பார்வைகள் : 383
அஜித் நடித்த "விடாமுயற்சி" திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், அவருடைய அடுத்த படமான "குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காத நிலையில், அவ்வப்போது சில பிரபல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.
அந்த வகையில், ஏற்கனவே அஜித்துக்கு ஒரு கதையை புஷ்கர்-காயத்ரி தம்பதிகள் கூறியிருந்ததாக தகவல் வெளியான நிலையில், நேற்று நடந்த சினிமா விழாவில் காயத்ரி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அஜித்தின் அடுத்த படத்தை நீங்கள் இயக்குவீர்களா? அது 'குட் அல்லது பேட்' அல்லது 'அக்லி' ஆக இருக்குமா?" என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த காயத்ரி, "எல்லோருக்கும் அஜித் அவர்களுடன் பணி செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அமைந்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும். எப்போது அமையும் என்பதை நாங்களும் உங்களைப் போலவே காத்திருக்கிறோம்," என்று தெரிவித்தார்.
புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் உருவான "சுழல் 2" வெப்சீரிஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க புஷ்கர்-காயத்ரிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்