ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த தோனி

29 பங்குனி 2025 சனி 10:06 | பார்வைகள் : 2815
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ஓட்டங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை எம்.எஸ்.தோனி படைத்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
16வது ஓவரில் களமிறங்கிய எம்.எஸ்.தோனி (M.S.Dhoni) 16 பந்துகளில் 30 ஓட்டங்கள் விளாசினார். இதில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனையை தோனி படைத்தார்.
தோனி CSK அணிக்காக 236 போட்டிகளில் 4,699 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 4,687 ஓட்டங்கள் (176 போட்டிகள்) எடுத்ததே சாதனையாக இருந்தது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1