Paristamil Navigation Paristamil advert login

நூற்றாண்டைத் தொடும் Shakespeare and Company! - புத்தக கடை!!

நூற்றாண்டைத் தொடும் Shakespeare and Company! - புத்தக கடை!!

16 மாசி 2017 வியாழன் 10:30 | பார்வைகள் : 18546


Shakespeare and Company என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். ஆங்கில மொழி புத்தகங்கள் விற்கும் கடை! பரிசில் இருக்கும் இந்த கடை விரைவில் நூற்றாண்டை தொட இருக்கிறது. 
 
Sylvia Beach என்பவர் அமெரிக்காவில் பிறந்து, தன் வாழ்நாளில் பாதியை பரிசில் செலவழித்தவர். தவிர, இவரே Shakespeare and Company புத்தக கடையினை நிறுவியவர் ஆவார். பிரபலமான புத்தக விற்பன்னர் கூட.
 
பரிசின் ஆறாம் வட்டாரத்தில் உள்ள rue de l'Odéon பகுதியில் நவம்பர் 19, 1919 ஆம் ஆண்டு இந்த கடை நிறுவப்பட்டது. அதற்கு அடுத்த வருடமே இக்கடையில் புத்தக விற்பனை சூடு பறக்க ஆரம்பித்தது. 
 
1941 ஆம் ஆண்டு, ஜெர்மனியின் படையெடுப்பால் இந்த கடை மூடப்பட்டது. அதன் பின்னர் இந்த கடை எப்போதுமே திறக்கப்படவில்லை!!
 
பத்து வருடங்கள் ஓடியது! விளம்பர இடைவேளையைத் தொடர்ந்து செய்திகள் தொடரும் என்பது போல், George Whitman என்பவரால் மீண்டும் Shakespeare and Company புத்தகக் கடை திறக்கப்பட்டது. 
 
இம்முறை பரிசின் ஐந்தாம் வட்டார்த்தில். George Whitman என்பவரும் அமெரிக்காவில் பிறந்து பரிசில் தன் வாழ்நாளை கழித்தவர் தான். 37 rue de la Bûcherie எனும் முகவரியில் 1951 ஆம் ஆண்டு கடையை நிறுவினார். அப்போது கடையின் பெயர் 'Le Mistral' என்பதாகும்.  தற்போதுவரை இந்த நிறுவனம் அதே இடத்தில் இயங்கி வருகிறது. 
 
1964 ஆம் ஆண்டு எழுத்துல சக்கரவர்த்தி William Shakespeare இன் 400 வது வயது நிறைவையும், Sylvia Beachக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் தனது கடைக்கு Shakespeare and Company எனும் பெயரை சூட்டினார். 
 
இரு கடைகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்ற போதும், Shakespeare and Company நிறுவனம் 1919 ஆம் ஆண்டில் இருந்து பரிசில் தனது சேவையினை ஆற்றி வருகிறது. இதோ இன்னும் இரண்டு வருடங்களில் தனது நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கிறது ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பனி!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்