Paristamil Navigation Paristamil advert login

ஆசிரியை தாக்கிய முன்னாள் மாணவர்கள்! - விசாரணைகள் ஆரம்பம்!!

ஆசிரியை தாக்கிய முன்னாள் மாணவர்கள்! - விசாரணைகள் ஆரம்பம்!!

29 பங்குனி 2025 சனி 11:10 | பார்வைகள் : 1085


Fontenay-aux-Roses (Hauts-de-Seine) நகரில் உள்ள பாடசாலை வளாகத்துக்கு முன்பாக வைத்து ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். அதே பாடசாலையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

அங்குள்ள collège des Ormeaux பாடசாலையில் வைத்து இந்த தாக்குதல் சென்ற செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. உடல்ரீதியாக தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதலை அடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதலுக்கு கல்வி அமைச்சகம், Fontenay-aux-Roses நகரில் நகரபிதா ஆகியோர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்