Paristamil Navigation Paristamil advert login

■ நேரமாற்றம்!!

■ நேரமாற்றம்!!

29 பங்குனி 2025 சனி 13:00 | பார்வைகள் : 2485


குளிர் காலத்தில் இருந்து கோடை காலத்துக்கான நேரமாற்றத்தினை இன்று இரவு பிரெஞ்சு மக்கள் சந்திக்கின்றனர்.

மார்ச் 29 சனிக்கிழமை - மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமைக்குட்பட்ட இரவில் இந்த நேர மாற்றம் ஏற்படுகிறது. இன்று இரவு பிரெஞ்சு மக்கள் ஒருமணிநேரம் குறைவாக தூங்க நேர்கிறது. அதிகாலை 2 மணிக்கு நேரம் 3 மணியாக மாற்றம் பெறுகிறது.

1975 ஆம் ஆண்டில் இருந்து இந்த நேரம் மாற்றம் பிரான்சில் நடைமுறையில் உள்ளது. அதன் பின்னர் ஐரோப்பாவின் பல நாடுகள் இதனை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன. 

**

கருத்துக்கணிப்பு ஒன்றில் 83.74% சதவீதமான பிரெஞ்சு மக்கள் இந்த நேரமாற்ற முறை தேவையில்லாதது என தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்